/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"வெள்ளையனே வெளியேறு' பொள்ளாச்சி காங்., கடைபிடிப்பு"வெள்ளையனே வெளியேறு' பொள்ளாச்சி காங்., கடைபிடிப்பு
"வெள்ளையனே வெளியேறு' பொள்ளாச்சி காங்., கடைபிடிப்பு
"வெள்ளையனே வெளியேறு' பொள்ளாச்சி காங்., கடைபிடிப்பு
"வெள்ளையனே வெளியேறு' பொள்ளாச்சி காங்., கடைபிடிப்பு
ADDED : ஆக 11, 2011 11:43 PM
பொள்ளாச்சி : காங்., சார்பில் 'வெள்ளையனே வெளியேறு' நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
காங்., கட்சியினர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 'வெள்ளையனே வெளியேறு போராட்டம், நாடு முழுவதும் தீவிரமடைந்து சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளையனே வெளியேறு நினைவு தினத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்' என, நிர்வாகிகள் வலியுறுத்தினர். காங்., புறநகர் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க (ஐ.என்.டி.யூ.சி.,) துணைத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் சந்தோஷ்குமார், புறநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் அன்வர் சதாத்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.