/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கி.கிரியில் தோல்வியை தழுவியது வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்கி.கிரியில் தோல்வியை தழுவியது வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
கி.கிரியில் தோல்வியை தழுவியது வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
கி.கிரியில் தோல்வியை தழுவியது வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
கி.கிரியில் தோல்வியை தழுவியது வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
ADDED : ஜூலை 29, 2011 11:33 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தி.மு.க., அழைப்பு விடுத்திருந்த வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் தோல்வியடைந்தது.பள்ளி மாணவகர்ளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்காததை கண்டித்து, தி.மு.க., சார்பில் மாநில அளவில், வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போராட்டத்திற்கான நோட்டீஸ்களை நேற்று முன்தினம் மாலை, தி.மு.க.,வினர் பள்ளி மாணவ மாணவிகளிடம் வழங்கி வந்தனர்.நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 180 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 76 மேல்நிலைப்பள்ளிகள் சேர்த்து மொத்தம், 184 அரசு பள்ளிகலும் வழக்கம் போல் செயல்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் 8 உயர்நிலைப்பள்ளிகளும், 6 மேல்நிலைப்பள்ளிகளும், 123 தனியார் நர்சரி மற்றும் பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளும் வழக்கம் போல் செயல்பட்டது.மாவட்டத்தில் மொத்தமுள்ள மாணவர்களில், 92 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தனர். இதே போல் ஆசிரியர்களும் 90 சதவீதத்திற்கு மேல் வகுப்புகளுக்கு வந்தனர். பல இடங்களில் தி.மு.க.,வினர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வகுப்புகளை புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தும் அதை பொருட்படுத்தாமல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பள்ளிகளின் எதிரே போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே டவுன் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 9 மணிக்கு பள்ளி நுழைவு வாயில் அருகே, தி.மு.க., மாநில மகளிர் அணி துணை தலைவர் காஞ்சனா கமலநாதன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், ஒன்றிய செயலாளர் வெங்கடப்பன், நகராட்சி துணை தலைவர் பழனி, கவுன்சிலர் கடலரசு மூர்த்தி, திருமலைநாதன் ஆகியோர் வந்தனர்.அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மாணவர்களை பள்ளி செல்ல விடாமல் தடுத்தால், அனைவரையும் கைது செய்வோம் என்று எச்சரித்தார். இதனையடுத்து தி.மு.க.,வினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.மாவட்டம் முழுவதும் நேற்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டதால், தி.மு.க., அழைப்பு விடுத்திருந்த வகுப்பு புறக்கணிப்பு போராட்டாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோல்வியடைந்தது.