Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூர் பாங்கில் கொள்ளை முயற்சி

ஓசூர் பாங்கில் கொள்ளை முயற்சி

ஓசூர் பாங்கில் கொள்ளை முயற்சி

ஓசூர் பாங்கில் கொள்ளை முயற்சி

ADDED : ஜூலை 29, 2011 11:33 PM


Google News

ஓசூர்: ஓசூர் பாங்க் ஆஃப் பரோடாவில் கொள்ளையர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜன்னல் கம்பிகைளை அறுத்து அபாய ஒலி எழுப்பும் கருவியை செயல் இழக்க செய்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.

வங்கி லாக்கரை திறக்க முடியாமல் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றதால், கோடிக்கணக்கான ரூபாய், தங்க நகைகள் தப்பியது.ஓசூர் பெங்களூரு சாலையில் பழைய செக்ஃபோஸ்ட் அருகே வணிகவளாக கட்டிடத்தின் மாடியில் பாங்க் ஆஃப் பரோடா உள்ளது. வங்கியின் சீனியர் மானேஜராக கோலா உள்ளார். பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்க்கின்றனர். இந்த வங்கியில் ஓசூர் டவுன், சிப்காட் பகுதியை சேர்ந்த ஏராளமான தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை வங்கியை ஊழியர்கள் திறந்தனர். அப்போது வங்கியில் பணம் மற்றும் நகை இருந்த லாக்கர் அறையின் ஜன்னல் கதவு கம்பிகள் பிளேடால் அறுத்து எடுக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. மேஜை, பீரோவில் இருந்த முக்கிய வங்கி ஆவணங்கள் சிதறி கிடந்ததோடு, ஒரு சில ஆவணங்கள் கிழிந்தும் காணப்பட்டது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், வங்கி லாக்கரை திறந்து பார்த்தனர். லாக்கரில் இருந்த 3 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை போகாமல் தப்பியது. இதனால், ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். இதுகுறித்து வங்கியின் சீனியர் மானேஜர் கோலா ஹட்கோ போலீஸில் புகார் செய்தார். ஏ.டி.எஸ்.பி., செந்தில்மார், ஏ.எஸ்.பி., ரம்யா பாரதி, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், வங்கி அமைந்துள்ள காம்பளக்ஸ் மாடியையொட்டி அமைந்துள்ள மற்றொரு காம்பளக்ஸ் வழியாக பின்புறம் வந்த கொள்ளையர்கள், வங்கி லாக்கர் அறை இருந்த ஜன்னல்கம்பிகளை பிளேடால் அறுத்தும், உடைத்தும் திறந்தனர். வங்கியினுள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த அபாய ஒலி எழுப்பும் கருவிக்கு சென்ற வயரை அறுத்தனர். அதன்பின் கொள்ளையர்கள், வங்கி லாக்கரை திறக்க முயற்சி செய்தனர். அதை திறக்க முடியாததால், கொள்ளையர்கள் அதை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், லாக்கரை கடைசிவரை உடைக்கவும், திறக்கவும் முடியவில்லை.ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள், வங்கி பீரோவில் ஏதாவது பணம், நகை இருக்கிறதா என தேடினர். எதுவும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள், வங்கி ஆவனங்களை எடுத்து எறிந்து விட்டு, திரும்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைரேகை நிபுனர்கள் வரைழக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்கள், கைரேகைகளை பதிவு செய்தனர். வங்கி லாக்கர் அறை இருக்கும் இடத்தை சரியாக கண்டறிந்து கொள்ளையர்கள் லாக்கர் வரை சென்றுள்ளதால், இந்த கொள்ளை சம்பவத்தில் வங்கி ஊழியர்கள், இரவு நேர காவலாளி யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us