தலைமுடி காணிக்கை வாங்க பிரான்ஸ் ஆர்வம்
தலைமுடி காணிக்கை வாங்க பிரான்ஸ் ஆர்வம்
தலைமுடி காணிக்கை வாங்க பிரான்ஸ் ஆர்வம்
ADDED : ஜூலை 26, 2011 08:36 PM
நகரி:திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திடம், இருப்பில் உள்ள தலைமுடிகளை வாங்க, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து, தேவஸ்தான அதிகாரிகளிடம் பேச்சு நடத்தின.திருப்பதி தேவஸ்தானத்திடம், தற்போது 300 கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடிகள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை இணையதள ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவானது .திருப்பதியில் காணிக்கையாகத் தரப்படும் தலை முடிகளை, அதிக விலைக்கு வாங்கவும், தரம்பிரித்து, சுத்தப்படுத்தி நீண்ட காலம் வரை இருப்பில் வைத்து, விற்பனை செய்து கொள்ள, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஷால்வியோ என்ற நிறுவனம் விருப்பத்தை வெளியிட்டது. இந் நிறுவனத்தின் பிரதிநிதிகள், மற்றும் சுத்தப்படுத்தி தரம் பிரிக்கும் நிபுணர் நிக்கோலஸ் ஆகியோர், அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.தேவஸ்தான நிர்வாகத்திடம், இருப்பில் உள்ள தலைமுடிகளைத் தரம் பிரித்த பின்னர், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் மூலம் விற்பனை செய்ய தேவஸ்தான அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.-நமது சிறப்பு நிருபர்-