ஐ.நா., வில் இந்தியாவிற்கு சீனா உதவி:யெச்சூரி
ஐ.நா., வில் இந்தியாவிற்கு சீனா உதவி:யெச்சூரி
ஐ.நா., வில் இந்தியாவிற்கு சீனா உதவி:யெச்சூரி
UPDATED : ஜூலை 17, 2011 09:31 AM
ADDED : ஜூலை 17, 2011 07:09 AM
பீஜிங்: ஐ.நா.,பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு சீன உதவி செய்ய தயாராக உள்ளதாக மா.கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான சீதாராம்யெச்சூரி தெரிவித்துள்ளார்.
சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் கம்யூனிஸ் அரசின் விழாவில் மா.கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பேசிய சீன கம்யூனிஸ்ட் அரசின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரான டாய்பிங்குவோ யெச்சூரியை சந்தித்து பேசினார். அப்போது சீன அரசு இந்தியாவுடன் நட்புறவு கொள்ள விரும்புவதாகவும்,ஐ.நா.,பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்திற்கான போட்டியில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் சீனா உள்ளதாக யெச்சூரி தெரிவித்துள்ளார்.ஐ.நா.,பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட உறுப்பினர்கள் நாடுகளின் வரிசையில் இடம் பெற வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் விருப்பமாகும்.