பாரபட்டி சுரேஷ்குமார் மற்றொரு வழக்கில் கைது
பாரபட்டி சுரேஷ்குமார் மற்றொரு வழக்கில் கைது
பாரபட்டி சுரேஷ்குமார் மற்றொரு வழக்கில் கைது
UPDATED : ஆக 20, 2011 05:12 PM
ADDED : ஆக 20, 2011 05:06 PM
சேலம்: மாஜூ அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனும், தி.மு.க., பஞ்சாயத்து துணை தலைவருமான பாரபட்டி சுரேஷ்குமார் அங்கம்மாள் காலனி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
அவரிடம் கடந்த சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் அவரை மற்றொரு வழக்கில் கைது செய்தனர். சுரேஷ்குமார் மீது நில அபகரிப்பு புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சுரேஷ்குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் பாரபட்டி சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.