/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இரண்டு லாரிகள் மோதல்: டிரைவர், கிளீனர் பலிஇரண்டு லாரிகள் மோதல்: டிரைவர், கிளீனர் பலி
இரண்டு லாரிகள் மோதல்: டிரைவர், கிளீனர் பலி
இரண்டு லாரிகள் மோதல்: டிரைவர், கிளீனர் பலி
இரண்டு லாரிகள் மோதல்: டிரைவர், கிளீனர் பலி
ADDED : ஆக 09, 2011 02:45 AM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே முன்னே சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர், கிளீனர் இறந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு காய்கறிகள் ஏற்றிய லாரியை கன்னியவாடியைச் சேர்ந்த கருப்பசாமி,30 விழுப்புரம் நோக்கி ஓட்டி வந்தார்.
அத்திகோம்பையைச் சேர்ந்த மருதமுத்து,20 அவருடன் கிளீனராக வந்தார். லாரி நேற்று தாமதமாக புறப்பட்டதால் டிரைவர் வேகமாக ஓட்டி வந்தார்.உளுந்தூர்பேட்டை அடுத்த எறைஞ்சி புறவழிச்சாலையில் நேற்று காலை 7.40 மணிக்கு லாரி வந்து கொண்டிருந்தபோது, தேங்காய் லோடு லாரியை முந்த முயன்றார். அப்போது தேங்காய் லோடு லாரியின் பின்னால் காய்கறி லோடு லாரி மோதியது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளும் சாலையோரம் கவிழ்ந்தன. விபத்தில் பலத்த காயமடைந்த காய்கறி லோடு லாரி டிரைவர் கருப்பசாமி மற்றும் கிளீனர் மருதமுத்து இருவரும் பரிதாபமாக இறந்தனர். மற்றொரு லாரி டிரைவர் மணி கண்டன், 39 படுகாயமடைந்தாõர். இவ்விபத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி., முரு கேசன், இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய மணிகண்டனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


