அடிமாட்டு விலைக்கு போர்க் கப்பல்கள் விற்பனை : நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை
அடிமாட்டு விலைக்கு போர்க் கப்பல்கள் விற்பனை : நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை
அடிமாட்டு விலைக்கு போர்க் கப்பல்கள் விற்பனை : நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை

லண்டன் : கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிரிட்டன், அதிலிருந்து சிறிதளவாவது மீள வேண்டும் என்பதற்காக, தனது விமானந்தாங்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்கள், ராணுவ ஹெலிகாப்டர்களை விற்க முன்வந்துள்ளது.
பிரிட்டன் ராணுவ அமைச்சகத்தின் இந்தாண்டு பட்ஜெட்டில், 36 பில்லியன் பவுண்டு (ஒரு பவுண்டு - 70 ரூபாய்.
இவை தவிர, மேசை, நாற்காலிகள் என பல்வேறு அறைகலன்களும், துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ் பாண்ட் அணிந்து வருவதைப் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கைக்கடிகாரங்களும், மருந்துப் பொருட்களும், தொப்பி உள்ளிட்ட உடைகளும் விற்பனை செய்யப்பட உள்ளதாக, ராணுவ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர, ராணுவத்தின் வசம் உள்ள புகழ் பெற்ற ஓவியங்களை, வெறும் 18 பவுண்டுக்கு விற்கவும் விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போதைய நிலையில் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை பொருட்களையும் விற்றால் கூட, ராணுவ அமைச்சகத்துக்கு வெறும் 4 பில்லியன் டாலர் மட்டுமே தேறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சகத்தின் மிகப் பெரிய நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க இயலாது என்பதும் தெளிவாகியுள்ளது.
ராணுவ அமைச்சகத்தின் இந்த முடிவு குறித்து, 'கன்சர்வேடிவ்' கட்சி எம்.பி., பாட்ரிக் மெர்சர் கூறுகையில், 'நீங்கள் இந்த விலை மதிப்பற்ற ராணுவப் பொருட்களை விற்கலாம். ஆனால், அடுத்த வாரமே அவை தேவைப்படலாம். இவை அனைத்தும் மில்லியன் கணக்கில் பணத்தைச் செலவழித்து வாங்கியவை. இன்று வெறும் வேர்க்கடலைக்காக விற்கப்படுகின்றன' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் கூறுகையில், 'எதையாவது விற்றாவது தனது பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டன் ராணுவம் உள்ளது' என்றார். மூத்த ராணுவ அதிகாரிகள் இந்த ஏலத்தை விரும்பவில்லை. ராணுவத்துக்கு மிகவும் அவசியமான பொருட்கள் கூட, ஏலப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதைக் கண்டு அவர்கள் மனம் குமுறுகின்றனர்.
பொருட்கள் உண்மையான விலை தற்போதைய விலை (தலா; பவுண்டு)
எச்.எம்.எஸ்., ஆர்க் ராயல் 200 மில்லியன் 3.5 மில்லியன் (விமானந்தாங்கி கப்பல்)
'டைப் 22' ரக போர்க்கப்பல் 400 மில்லியன் 3 லட்சம்
'கேசல்' ஹெலிகாப்டர் 5 மில்லியன் 1 லட்சம்
ஜாகுவார் கார் 2 லட்சம் 12 ஆயிரம்
'லேண்ட் ரோவர்' ஜீப் 65 ஆயிரம் இரண்டாயிரம்