ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
திருப்பூர் : மாவட்ட ஆதிதிராவிடர் நலம் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். எஸ்.பி., பாலகிருஷ்ணன், டி.ஆர்.ஓ., கஜலட்சுமி முன்னிலை வகித்தனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வன்கொடுமை குறித்த புகார்கள் மற்றும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் விளக்கினர். அதேபோல், ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை, வங்கி கடன் உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட துறையினர் விளக்கினர். ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் அச்சமூகம் சார்ந்த பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.