Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் பராசக்தி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.

ADDED : ஜூலை 30, 2011 02:12 AM


Google News
குற்றாலம்:குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு 2 நாட்கள் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் அகமதிப்பீட்டுத்தரக்குழு, தமிழ்நாடு தகவல் கருத்தரங்கு பரிமாற்ற தொழில்நுட்பத்தின் துணையுடன் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் இருநாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். பேராசிரியர் பாலசரஸஅவதி முன்னிலை வகித்தார். கல்லூரி அகமதிப்பீட்டுத்தரக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மாருதி கலைச்செல்வி வரவேற்றார். திருமதி விஜயலட்சுமி ஆய்வுக்கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். முதல் பிரதியை செங்கோட்டை மகாத்மா காந்தி சேவை மைய நிறுவனர் விவேகானந்தன் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்க இயக்குநர் டாக்டர் ரமேஷ், கற்றலுக்கும், கற்பித்தலுக்குமான கண்ணி பயன்பாடு என்ற தலைப்பிலும், மைசூர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சாலினி உயர்கல்வி வளர்ச்சியில் தூண்டுகோலாக விளங்கும் கணிணி மயமாக்கப்பட்ட நூலகம் என்ற தலைப்பிலும், கருத்துரை வழங்கினார்.மறுநாள் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு தகவல் கருத்து பரிமாற்ற தொழில்நுட்ப துறையின் தலைவர் முகம்மது அக்ரமுல்லா, மின்னணு வழிக்கற்றல் என்ற தலைப்பிலும், பாண்டிச்சேரி பல்கலைக்கழ போசிரிர் டாக்டர் ஜெயச்சந்திரன், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனையின் தரவளர்ச்சிக்குத் தகவல் மற்றும் கருத்துபரிமாற்ற தொழில்நுட்பத்திறன் பங்கு என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினர்.பின்னர் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் சங்கரவடிவம்மாள் வரவேற்றார். போசிரியர் முத்துலட்சுமி இருநாள் அமர்வுகளில் கருத்துக்களைத் தொகுத்து வழங்கினார். ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி முதல்வர் டாக்டர் ரஞ்சித்சிங், பேராசிரியர் பாலசரஸ்வதி நிறைவுரையாற்றினர். வரலாற்றுத்துரை தலைவர் சரோஜா நன்றி கூறினார்.கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை கல்லூரி அகமதிப்பீட்டுதரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர்கள் மாருதி, கலைச்செல்வி, விஜயலட்சுமி, சரோஜா, சங்கரவடிவம்மாள், பாலசரஸ்வதி, வேலம்மாள், முத்துலட்சுமி, கண்காணிப்பாளர் அழகம்மாள், சங்கரவடிவம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us