Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உவர்ப்பான குடிநீர் வினியோகம்; ஊருக்குள் புகும் மழை நீரால் பாதிப்பு : அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிலை

உவர்ப்பான குடிநீர் வினியோகம்; ஊருக்குள் புகும் மழை நீரால் பாதிப்பு : அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிலை

உவர்ப்பான குடிநீர் வினியோகம்; ஊருக்குள் புகும் மழை நீரால் பாதிப்பு : அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிலை

உவர்ப்பான குடிநீர் வினியோகம்; ஊருக்குள் புகும் மழை நீரால் பாதிப்பு : அணைக்கரைப்பட்டி ஊராட்சி நிலை

ADDED : ஆக 13, 2011 04:37 AM


Google News

சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் அணைக்கரைப்பட்டி,ஓசாரிபட்டி, பாரதிநகர்,விழிப்பினிக்களம்,பட்ட கோயில்களம்,தேத்தாங்காடு,முத்துவடுகநாதசுவாமி நகர்,மேல்மலை குடியிருப்பில் 2ஆயிரத்து 600 பேர் வசிக்கின்றனர்.

தலைவராக ஆ.செல்லம் உள்ளார்.

இப்பகுதி பிரச்னைகள் என்ன? சிங்கம்புணரி நகரின் ஒரு பகுதியாக விழிப்பினிக்களம், தேத்தாங்காடு, முத்துவடுகநாதசுவாமிநகர், மேல்மலைகுடியிருப்பு,குறிஞ்சிநகர் உள்ளது. இங்கு புதியதாக பல வீடுகள் கட்டப்படுகின்றன.இப்பகுதிஅணைக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தில் உள்ளதால் வளர்ந்து வரும் நகர் பகுதிக்கு தேவையான ரோடு,குடிநீர், கழிவு நீர்கால்வாய், தெருவிளக்கு வசதிகள் இல்லை. தினமும் சேரும் குப்பைகளை அகற்ற துப்புரவு பணியாளர் இல்லை. தேத்தாங்காட்டில் பல இடங்களில் வாய்க்காலில் கழிவு நீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது. குடிக்க லாயக்கற்ற உவர்ப்பு நீர் வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மெயின்ரோடு குப்பை மேடாகி கிடக்கிறது.

இப்பகுதி மக்கள் கூறுவதென்ன:

ஆ.சின்னு, பாரதிநகர்: குடிசைப்பகுதியான பாரதிநகருக்குள் மழை நீர் புகுவதை தடுக்க தடுப்புச் சுவர் இல்லை. மழைக் காலத்தில் பாதுகாப்பாக தங்க பொது கட்டட வசதியில்லை.குடிநீர் குடிக்கலாயக்கற்ற உவர்ப்பு நீராக உள்ளது.மெயின்ரோட்டிலிருந்து பாரதி நகர் வரை தெருவிளக்கு இல்லாமல் இரவில் அச்சத்துடன் பெண்கள் வீட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது.

கே.நாகராஜன், விவசாயி: அணைக்கரைப்பட்டி ஐந்தாண்டுகளாக துப்புரவு பணியாளர் இல்லாமல் கிராமத்தில் குப்பைகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழை காலத்தில்பாலாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. துவக்கப்பள்ளி காம்பவுண்ட் சுவர் முன் பாதியில் ரோடு இல்லாமல் குப்பை மேடாகி வருகிறது.

மதினா,தேத்தாங்காடு: மூன்று மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. தெருவில் குப்பை குவிந்துள்ளதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

நபீஷா,தேத்தாங்காடு: வீடுகள் முன் வாய்க்காலில் கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. கொசுத்தொல்லையால் இரவில் தூங்க முடியவில்லை.

20 வருடமாக உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கூறியும் கழிவு நீர் வாய்க்கால் பிரச்னை தீர்க்கவில்லை. ஒரே பகுதியில் ஊராட்சி,பேரூராட்சி நிர்வாகம் உள்ளதால் தீர்வு காணமுடியவில்லை.

ஊராட்சி தலைவர் சொல்வது என்ன? : ஆ.செல்லம், ஊராட்சி தலைவர்: ஐந்தாண்டில் ஊராட்சியில் அனைத்து பகுதியிலும் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பட்டகோயில்களம்,முத்துவடுகநாதர்சாமி நகரில் ரூ.11 லட்சம் செலவில் மேல்நிலை தொட்டிகள், அணைக்கரைப்பட்டியில் ரூ. 3.25 லட்சம் செலவில் நூலக கட்டடம்,பாரதி நகரில்ரூ 2 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டடம்ரூ 1.5. லட்சத்தில் புதியரோடு. கிராமங்களில் 11 லட்சம் செலவில் 6 சிமென்ட் ரோடு,1.5 லட்சம் செலவில் புதிதாக 36 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ 45 லட்சம் செலவில் 9 கண்மாய்கள் மராமத்து செய்யப்பட்டுள்ளது.

உடனடி தேவை என்ன?

துப்புரவு பணியாளர் நியமிக்க வேண்டும்.

தெருவிளக்குகள் எரிய வைக்க வேண்டும்.

கழிவு நீர்,குப்பைகள் அகற்ற வேண்டும்.மண் ரோடுகளை மேம்படுத்த வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us