Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உங்கள் வார்டு கவுன்சிலர் ஆணா, பெண்ணா5ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தெரியும்

உங்கள் வார்டு கவுன்சிலர் ஆணா, பெண்ணா5ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தெரியும்

உங்கள் வார்டு கவுன்சிலர் ஆணா, பெண்ணா5ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தெரியும்

உங்கள் வார்டு கவுன்சிலர் ஆணா, பெண்ணா5ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தெரியும்

ADDED : செப் 03, 2011 01:45 AM


Google News
தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பு கூட்டம் வரும் 5ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் 4 மண்டலங்கள் அமைப்பது மற்றும் 60 வார்டுகளின் அடங்கியுள்ள பகுதிகள், ஆண், பெண் வார்டுகள் குறித்து அரசின் உத்தரவு கூட்ட பார்வைக்கு வைக்கப்படுகிறது.தூத்துக்குடி மாநகராட்சி சிறப்பு கூட்டம் வரும் 5ம் தேதி காலை மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இன்ஜினியர் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாநகராட்சி கடைசி கூட்டமாக இந்த கூட்டம் இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு கூட்டம் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்பாக சில நாட்களுக்கு முன்பு நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் 5ம் தேதி நடக்கும் சிறப்பு கூட்டத்தில் தற்போது மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளுடன் மொத்தம் 60 வார்டுகளுடன் வெளியாகி உள்ள அரசு உத்தரவு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. மொத்தம் தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போதுள்ள 51 வார்டுகள் 40 வார்டுகளாகவும், மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளான மீள விட்டான், சங்கரப்பேரி, அத்திமரப்பட்டி, தூத்துக்குடி ரூரல், முத்தையாபுரம் ஆகிய பஞ்சாயத்துக்கள் 20 வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.இந்த வார்டுகள் அடங்கிய பகுதியில் எந்தெந்த பகுதிகள் வருகிறது. முதல் வார்டில் இருந்து 60 வார்டு வரை இடம் பெற உள்ள பகுதிகள் எவை, எவை என்பது முழுமையாக 5ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் அரசின் உத்தரவு மூலம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.இதில் ஆண் வார்டுகள் எது, பெண் வார்டுகள் எது என்கிற விபரம் தெரிந்து விடும். இது தவிர மாநகராட்சியில் 4 மண்டலங்கள் இடம் பெறுகிறது. தூத்துக்குடி புதிய மாநகராட்சி, பழைய மாநகராட்சி கட்டடங்கள், முத்தையாபுரம், சங்கரப்பேரி பஞ்சாயத்து அலுவலகங்களில் தலா ஒரு மண்டல அலுவலகம் அமைகிறது. புதியதாக உருவாக உள்ள நான்கு மண்டலங்கள் குறித்தும் அந்த கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்த மண்டல அலுவலகத்தின் கீழ் எந்த வார்டுகள் வருகிறது என்பது குறித்தும் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பொதுவா, பெண்ணா, ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்படுகிறதா, வார்டுகளி ல் எந்தெந்த வார்டுகள் ஆதிதிராவிடர்களுக்கு என்பது குறி த்த தகவலும் இன்னும் சில நாட்களில் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது. அந்த தகவல் உள்ளிட்ட சில தீர்மானங்களுக்காக வரும் 15ம் தேதிக்கு முன்பாக ஒரு கூட்டம் நடக்கும் என்று கூறப்படுகிறது. அது தான் கடைசி கூட்டமாக இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us