மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு பாதுகாப்பு படையினர் குவிப்பு
மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு பாதுகாப்பு படையினர் குவிப்பு
மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு பாதுகாப்பு படையினர் குவிப்பு
ADDED : ஜூன் 09, 2024 11:54 PM

இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பதற்றமான நிலை நீடித்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் மெய்டி - கூகி பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
பல மாதங்களாக நீடித்த சண்டையால், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையால், மணிப்பூரில் மீண்டும் இயல்புநிலை திரும்பி வருகிறது. சமீபத்தில், ஜிரிபாம் மாவட்டத்தில், சோய்பம் சரத்குமார் சிங், 59, என்பவரை ஆயுதமேந்திய நபர்கள் கொலை செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல், போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தது. மேலும், 70க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து, போலீசார் நேற்று கூறியதாவது:
ஜிரிபாம் மாவட்டத்தில் பதற்றமான நிலை நீடித்தாலும் கட்டுக்குள் இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை கும்பல் களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை கண்காணித்து வருகிறோம். பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொது மக்கள் யாரும் கருத்து பதிவிட வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.