ADDED : ஜூலை 24, 2011 09:11 AM
சென்னை : சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள நடிகர் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டு நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் நடிகர் மம்முட்டியின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.22 லட்சத்திற்கு வருமான வரித்துறையினர் கணக்கு கேட்டுள்ளனர். இது குறித்து கூறிய நடிகர் மம்முட்டி, உரிய ஆவணங்கள் முறைப்படி சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து மம்முட்டி வீட்டில் நாளை மீண்டும் சோதன நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.