Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஆதரவு தந்தால் நன்மைகள் ஏராளம்; கோத்தகிரியில் அமைச்சர் வாக்குறுதி

ஆதரவு தந்தால் நன்மைகள் ஏராளம்; கோத்தகிரியில் அமைச்சர் வாக்குறுதி

ஆதரவு தந்தால் நன்மைகள் ஏராளம்; கோத்தகிரியில் அமைச்சர் வாக்குறுதி

ஆதரவு தந்தால் நன்மைகள் ஏராளம்; கோத்தகிரியில் அமைச்சர் வாக்குறுதி

ADDED : அக் 14, 2011 09:52 AM


Google News
Latest Tamil News

கோத்தகிரி: கோத்தகிரி பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, மாநில உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் ஓட்டு சேகரித்தார்.

கோத்தகிரி பேரூராட்சி கேர்பன் கிராமத்தில் அமைச்சர் புத்திசந்திரன் பேசியதாவது: மாநில முதல்வர் ஜெயலலிதா நீலகிரி மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறார். இதனால், உங்களது ஆதரவை வரும் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்களாக வழங்கவேண்டும். கோத்தகிரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாப்பு, 12 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுஜாதா ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும். இதனால், பல நன்மைகள் கிடைக்கும்,'' என்றார்.

இதில், கோத்தகிரி ஒன்றிய செயலர் பச்சநஞ்சன், தேர்தல் பொறுப்பாளர் பாரதியார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, கட்டபெட்டு பகுதியில் பிரசாரத்தை துவக்கிய அமைச்சர், நடுஹட்டி, வெஸ்ட்புரூக், ஒரசோலை, தாந்தநாடு, நெடுகுளா மற்றும் அரவேனு ஆகிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us