/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டல நிர்வாகிகள் தேர்தல்அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டல நிர்வாகிகள் தேர்தல்
அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டல நிர்வாகிகள் தேர்தல்
அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டல நிர்வாகிகள் தேர்தல்
அரசு கல்லூரி ஆசிரியர் கழக மண்டல நிர்வாகிகள் தேர்தல்
ADDED : ஜூலை 13, 2011 02:31 AM
கும்பகோணம்: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்தலில் தஞ்சை மண்டல செயலாளராக கும்பகோணம் அரசு கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இதில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளை உள்ளடக்கிய தஞ்சை மண்டலத்திற்கான தேர்தல் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடந்தது. இதில், தஞ்சை மண்டலத் தலைவராக மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கணிதத்துறைப் பேராசிரியர் வடிவேல், துணைத்தலைவராக அதே கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் ராசாராமன், மண்டலச் செயலாளராக கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் துரையரசன், பொருளராக அதே கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியர் ரமேஷ், இணைச்செயலாளராக தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடந்த மண்டலப் பொதுக்குழு கூட்டத்தில் பொறுப்பேற்றனர்.
இத்தகவலை கும்பகோணத்தில் மண்டலச் செயலாளர் முனைவர் துரையரசன் தெரிவித்தார்.


