/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மின்னல் தாக்கியதில் கொட்டகை கருகியதுமின்னல் தாக்கியதில் கொட்டகை கருகியது
மின்னல் தாக்கியதில் கொட்டகை கருகியது
மின்னல் தாக்கியதில் கொட்டகை கருகியது
மின்னல் தாக்கியதில் கொட்டகை கருகியது
ADDED : ஆக 11, 2011 11:09 PM
தியாகதுருகம் : மின்னல் தாக்கியதில் கூரை கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே வைத்திருந்த தானியங்கள் கருகியது.
தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு காட்டுகொட்டகையை சேர்ந்த பொன்னுசாமி,50. இவர் தனது நிலத்தில் கூரை கொட்டகை அமைத்து அதில் நெல், உளுந்து, கம்பு உள்ளிட்டவைகளை சேமித்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் இப்பகுதியில் பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது கூரை கொட்டகையில் திடீரென மின்னல் தாக்கியதால் அது தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. அதில் வைத்திருந்த 8 மூட்டை நெல், 1 மூட்டை உளுந்து, 2 மூட்டை கம்பு உள்ளிட்ட தானியங்கள் தீயில் கருகியது.