ADDED : ஆக 28, 2011 12:47 AM
திருப்பூர் : திருப்பூரில், தீப்புண்களுடன் இருந்த சிறுமி மீட்கப்பட்டாள்; கொடூர செயலில் ஈடுபட்டவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் வாவிபாளையம், சடையப்பன் கோவில் வீதியில், 3 வயது மதிக்கத்தக்க சிறுமி, நேற்று காலையில் இருந்து அழுதபடி நின்றிருந்தாள்.
நீண்ட நேரம், சிறுமியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்பகுதியில், குப்பை காகிதம் சேகரித்தபடி வந்த பெண்ணும், இளநீர் கடை வைத்திருக்கும் பெண்ணும், குழந்தைக்கு பால், பிஸ்கட், இளநீர் கொடுத்துள்ளனர். சிறுமியின் உடலில் பல இடங்களில் தீயால் சுட்ட புண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தகவலறிந்த வடக்கு போலீசார் சிறுமியை மீட்டு, 'சேவ்' அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். 'சேவ்' அமைப்பினர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்; சிறுமியின் பெற்றோர் குறித்தும், தீயால் கொடுமைப்படுத்தியவர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.


