/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடுபள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு
பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு
பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு
பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு
ADDED : ஜூலை 25, 2011 10:18 PM
விருதுநகர் : ''மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்களே, கட்டுப்படுத்த வேண்டும்,'' என, பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் கல்வி மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பள்ளி மாணவர்களை திரட்டி சசமச்சீர் கல்வியை அமல்படுத்தகோரி, போராட்டம் நடத்த மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், மாணவர்களை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி,''பள்ளி வரும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் சுற்றவும், பள்ளி வளாகம் வந்த பின் வெளியே செல்லவும் அனுமதிக்க கூடாது. பள்ளி நேரம் முடியும் வரை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தான் இருக்க வேண்டும். பள்ளிக்கு வந்த மாணவர்கள் இடையில் வெளியேறினால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதன்மை கல்வி அதிகாரிகளால் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.