
புதுடில்லி : 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஒரு பைசா கூட, அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்று கூறியவர் தானே, கபில் சிபல்' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
இதையடுத்து, அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து காங்., தலைவர் சோனியா பதில் அளிக்க வேண்டும் என்றும், எங்கள் கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரி கூறினார். ஆனால், அவரின் கேள்விக்கு, சோனியா பதில் அளிக்கவில்லை. அதற்கு பதில், அமைச்சர் கபில் சிபலை பதில் அளிக்க வைத்துள்ளனர். இது விநோதமாக உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஒரு பைசா கூட, இழப்பு ஏற்படவில்லை என்றும், இது தொடர்பான மத்திய தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை, பயனற்றது என்றும், ஏற்கனவே கூறியவர் தானே, இந்த கபில் சிபல்?
ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர். சிபலுடன் இணைந்து பணிபுரிந்தவர். ராஜாவின் கட்சி, தொடர்ந்து ஐ.மு., கூட்டணியில் தான் உள்ளது. ராஜா அப்பாவி என, பிரதமர் முன்பு கூறினாரே, அது ஏன்? ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான உரிமம் கோருவதற்கான, தேதி மாற்றப்பட்டது ஏன்? விண்ணப்பங்கள் தாக்கல் செய்வதற்கு, வெறும், 45 நிமிடங்கள் தான், அவகாசம் கொடுக்கப்பட்டன.