/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலத்தில் சீசன் ""ஜோர்'' சுற்றுலா பயணிகள் குதூகலம்குற்றாலத்தில் சீசன் ""ஜோர்'' சுற்றுலா பயணிகள் குதூகலம்
குற்றாலத்தில் சீசன் ""ஜோர்'' சுற்றுலா பயணிகள் குதூகலம்
குற்றாலத்தில் சீசன் ""ஜோர்'' சுற்றுலா பயணிகள் குதூகலம்
குற்றாலத்தில் சீசன் ""ஜோர்'' சுற்றுலா பயணிகள் குதூகலம்
ADDED : ஆக 01, 2011 01:59 AM
குற்றாலம் : குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும்,
நேற்று விடுமுறை தினம் என்பதாலும் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம்
அலைமோதியது.கடந்த ஜூன் 1ம் தேதி முதல் குற்றால சீசன் துவங்கியது.
சீசன்
துவங்கிய ஓரிரு வாரங்கள் போதிய சாரல்மழை இல்லாததால் மழை பொய்த்துவிடுமோ என
அஞ்சிய விவசாயிகளும், சுற்றுலா பயணிகளும் தற்போது தொடர்ந்து பெய்து வரும்
மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் அருவிகளில் நீர்வரத்து
அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரித்து வருகிறது.கடந்த
இரு தினங்கள் விடுமுறை தினம் என்பதாலும், சாரல் திருவிழா நிறைவு விழா
மற்றும் ஆடி அமாவாசை போன்றவை ஒரே தினத்தில் நடந்ததாலும் கூட்டம்
அலைமோதியது. ரோடுகளின் இருபுறமும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. நேற்றைய
நிலவரப்படி மெயின் அருவியைவிட ஐந்தருவியில் கூட்டம் அதிகரித்து
காணப்பட்டது. வானம் மப்பும், மந்தாரமுமாக தென்றலில் ஆடும் மேகத்தை காண
முடிந்தது. அவ்வப்போது மலையில் சிறிய அளவில் சாரல் மழை பெய்தது.