/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மதுபாட்டில்களில் விலை : கலால் துறை எச்சரிக்கைமதுபாட்டில்களில் விலை : கலால் துறை எச்சரிக்கை
மதுபாட்டில்களில் விலை : கலால் துறை எச்சரிக்கை
மதுபாட்டில்களில் விலை : கலால் துறை எச்சரிக்கை
மதுபாட்டில்களில் விலை : கலால் துறை எச்சரிக்கை
ADDED : ஜூலை 26, 2011 12:09 AM
புதுச்சேரி : மதுபான பாட்டில்கள் மீது விற்பனை விலை அச்சிடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை துணை ஆணையர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உள்ளூரில் மதுபான தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகை மதுபான பாட்டில்கள் மீதும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (எம்.ஆர்.பி.) அச்சிடுவது வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விற்பனை விலையை அச்சிடாத தயாரிப்பாளர்கள், சிப்பமிடுபவர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் மதுபான விற்பனையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.