/உள்ளூர் செய்திகள்/தேனி/தொடர் நோய் தாக்கம் காரணம் அறிய உத்தரவுதொடர் நோய் தாக்கம் காரணம் அறிய உத்தரவு
தொடர் நோய் தாக்கம் காரணம் அறிய உத்தரவு
தொடர் நோய் தாக்கம் காரணம் அறிய உத்தரவு
தொடர் நோய் தாக்கம் காரணம் அறிய உத்தரவு
ADDED : செப் 08, 2011 10:46 PM
கம்பம்: நெல், வாழை, திராட்சை பயிர்களில் தொடர்ந்து தாக்கும் நோய்களுக்கான காரணத்தை அறிய, விவசாயப் பல்கலை., மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
திராட்சையில் செவட்டை நோய், வாழையில் காஞ்சாரி நோய், நெற்பயிரில் குலை நோய், தென்னையில் வாடல் நோய் ஆகியவை குறிப்பிட்ட காலத்தில் ஆண்டுதோறும் தாக்கி வருகின்றன. குறிப்பாக மழை மற்றும் பனி காலங்களில் இந்த நோய் தாக்குதல் இருக்கிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். இதற்கான காரணம், நோய்களுக்கான பூச்சிகள், அப்போது நிலவும் சீதோஷ்ணநிலையை ஆராய்ந்து, முழுமையாக தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுமாறு விவசாயப் பல்கலை., தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.