/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஒட்டன்சத்திரம்-தாராபுரம் 4 வழிச்சாலை வேண்டும்ஒட்டன்சத்திரம்-தாராபுரம் 4 வழிச்சாலை வேண்டும்
ஒட்டன்சத்திரம்-தாராபுரம் 4 வழிச்சாலை வேண்டும்
ஒட்டன்சத்திரம்-தாராபுரம் 4 வழிச்சாலை வேண்டும்
ஒட்டன்சத்திரம்-தாராபுரம் 4 வழிச்சாலை வேண்டும்
ADDED : ஆக 28, 2011 10:16 PM
ஒட்டன்சத்திரம் : விபத்துக்களை தவிர்க்க, போக்குவரத்து மிகுந்த ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்கள், லாரிகள் உட்பட அனைத்தும் வாகனங்களும் ஒட்டன்சத்திரம் வழியாக திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு செல்கிறது.இதனால் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோடு மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் ஒன்றாக மாறி உள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. தற்போது இருவழிப்பாதையாக உள்ளது. இதனால் எதிரில் வாகனங்கள் வரும் போது முன்னால் செல்லும் வாகனத்தை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. போதுமான அகலம் இல்லாததால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. கொசபட்டி- அம்பிளிக்கை இடையே உள்ள குறுகிய பாலத்தை விரிவுபடுத்தாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அப்பியம்பட்டிநால்ரோடு பகுதியும் விபத்து பகுதியாக உள்ளது.வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட் டை அகலப்படுத்தி, நான்கு வழிச்சாலையாக மாற்றினால் தான், விபத்துகள் குறையும்.