சிறப்பான வளர்ச்சியை நோக்கி தமிழகம் : அரசு செயலர் பெருமிதம்
சிறப்பான வளர்ச்சியை நோக்கி தமிழகம் : அரசு செயலர் பெருமிதம்
சிறப்பான வளர்ச்சியை நோக்கி தமிழகம் : அரசு செயலர் பெருமிதம்
சென்னை : ''தமிழகம், தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது,'' என, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலர் ஸ்ரீதர் பேசினார்.
தமிழகத்தில், பல வர்த்தக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் மக்களின் தேவைகளை அரசுக்கு எடுத்துக் கூறுகின்றன. தொழில் மற்றும் வர்த்தகம் சிறப்பாக நடப்பதற்கு, வர்த்தக சங்கங்களின் கருத்தரங்கம் பெரிதும் உதவுகின்றன.
தொழில்கள், மருத்துவம், கல்வி போன்ற அனைத்து துறைகளிலும், தமிழகம் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில், தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து விதமான பயிற்சிகள், கடன் வசதி போன்றவை, அதிகளவில் வழங்கப்படுகின்றன. இவ்வாறு ஸ்ரீதர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை கஸ்டம்ஸ் (ஏற்றுமதி) கமிஷனர் கண்ணன் பேசும் போது, 'கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்திற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வர்த்தகம் அதிகளவில் நடைபெறுகிறது. வர்த்தகம் சுமுகமாக நடப்பதற்கு, வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்' என்றார்.