Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் விவசாய கல்லூரிஅரிதாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை

திண்டிவனத்தில் விவசாய கல்லூரிஅரிதாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை

திண்டிவனத்தில் விவசாய கல்லூரிஅரிதாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை

திண்டிவனத்தில் விவசாய கல்லூரிஅரிதாஸ் எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : செப் 21, 2011 09:55 PM


Google News
திண்டிவனம்:திண்டிவனத்தில் அரசு விவசாய கல்லூரி துவக்க வேண்டுமென அரிதாஸ் ஏம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழக சட்டசபை கூட் டத்தில் சுகாதாரத் துறை மானிய கோரிக்கையில் டாக்டர் அரிதாஸ் எம். எல்.ஏ., பேசியதாவது :அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் முதல்வர் புதிய மருத் துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழை மக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். மருத்துவ துறையில் இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக தமிழகம் திகழ முதல்வர் ஜெ.,தான் காரணம்.எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம் உள்ள திண்டிவனத்தில் விவசாய கல்லூரி அமைக்க வேண்டும்.

திண்டிவனத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும். அரசு விரைவு பேருந்து நிலைய பணிமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.திண்டிவனத்தில் சப் கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நீதி மன்றங்கள், பதிவாளர் அலுவலகம் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த வளாகம் அமைக் கப்பட வேண்டும். திண்டிவனத்தில் அரசு பஸ் நிலையம் அமைக்க வேண் டும். அரசு மருத்துவமனையில் சி.டி.,ஸ்கேன், உட்பட போதிய மருத்துவ உபகரணங்கள் அமைக்க வேண்டும்.மரக்காணம் பகுதியில் அரசு கலை கல்லூரி துவங்க வேண்டும். திண்டிவனம் நகரின் மையபகுதியில் சமுதாய நலக் கூடம் கட்டித் தர வேண்டும்.இவ்வாறு அரிதாஸ் எம்.எல்.ஏ., பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us