/உள்ளூர் செய்திகள்/சென்னை/அடையாறு, திருவான்மியூர் போக்குவரத்து நெரிசலுக்கு...தீர்வுஅடையாறு, திருவான்மியூர் போக்குவரத்து நெரிசலுக்கு...தீர்வு
அடையாறு, திருவான்மியூர் போக்குவரத்து நெரிசலுக்கு...தீர்வு
அடையாறு, திருவான்மியூர் போக்குவரத்து நெரிசலுக்கு...தீர்வு
அடையாறு, திருவான்மியூர் போக்குவரத்து நெரிசலுக்கு...தீர்வு
கிழக்கு சென்னையின் 'கிடு கிடு' வளர்ச்சியால், கலங்கரை விளக்கம் முதல் அக்கரை வரையிலான பகுதிகளில் பெரும்
உயர்மட்ட சாலை திட்டம் : கடந்த 2005ல் அ.தி.மு.க., ஆட்சியில் கடற்கரை பகுதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில், 'பீச்' கமிட்டி ஏற்படுத்தப்பட்டு, கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை, 978 கோடி ரூபாய் செலவில், 9.7 கி.மீ., தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்க' முடிவு செய்யப்பட்து.
கைவிட்ட அரசு : சீனிவாசபுரம், ஆல்காட், ஊரூர், திருவான்மியூர், கொட்டிவாக்கம் ஆகிய குப்பங்கள் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச் சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் என கருதிய அப்பகுதி மக்கள் திட்டத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இத்திட்டத்தை கொண்டு வந்த, அ.தி.மு.க.,வே., 2008ல் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, மக்களின் கோரிக்கையை ஏற்று, இத்திட்டம் கைவிடப்பட்டதாக, சென்ற வாரம் சென்னை ஐகோர்டில் தெரிவித்தது.
தொடர்ச்சி பகுதிகள் திட்டத்தின் தொடர்ச்சி : பகுதிகளான திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள இடங்களில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. எண்ணற்ற ஐ.டி.நிறுவன வாகனங்கள், இன்ஜினியரிங் கல்லூரி வாகனங்களால், இந்த பகுதிகளில், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்கள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால், இந்த பகுதிகளிலாவது 2005-06ம் ஆண்டு வகுக்கப்பட்ட ஆறுவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆறுவழிச்சாலை திட்டம் : திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., தூர சாலை தற்போது, நான்கு வழிச் சாலையாக உள்ளது. தமிழக அரசு, 2005-06ம் ஆண்டில், இந்த நான்குவழிச் சாலையை, ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்த, 10 கோடி ரூபாய் ஒதுக்கியது.தற்போது ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும் போது திருவான்மியூர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம் ஆகிய பகுதிகளில், நிலம் கையகப்படுத்த, 350 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவான்மியூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறும்போது, ''கிழக்கு கடற்கரை சாலையின் நுழைவு வாயிலாக, திருவான்மியூர் திகழ்கிறது. இங்கு, காலை மற்றும் மாலை நேரங்களில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நான்கு வழிச் சாலையை, ஆறு வழிச் சாலையாக மாற்றும் பட்சத்தில், ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறையும்.'' என்றார்.
எதிர்ப்பில்லாமல் நில ஆர்ஜிதம் பெற... : ஆறுவழிச்சாலை திட்டம் குறித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர், '' ஆறுவழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதையும், அதற்கு சந்தை மதிப்பில் விலை கொடுப்பதும் சிக்கலான விவகாரமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள, சாலைகள் அகலப்படுத்துவதற்கு, அரசு பணத்திற்கு பதிலாக, அவர் கொடுத்த நிலத்தின் அளவிற்கு, 'எப்.எஸ்.ஐ.,' போட்டு, சி.எம்.டி.ஏ., வழங்கும், வளர்ச்சி உரிமை மாற்றம் சான்றிதழை வழங்கலாம். நிலம் வழங்கியவர்கள், அந்த சான்றிதழை பயன்படுத்தி, சி.எம்.டி.ஏ., அனுமதி பெற்ற இடத்தில், கட்டடம் கட்டும்போது, கூடுதல் சதுர அடியில் தளங்கள் அமைத்துக் கொள்ளலாம். அல்லது தனியார் நிறுவனங்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சான்றிதழை விற்று விடலாம். நிலம் வழங்கிய பயனாளிகளுக்கு சந்தை விலையே கிடைக்கும். யாருக்கும் எவ்வித பாதிப்பும் கிடையாது'' என்றார்.
- வீ.அரிகரசுதன் -