Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அணையில் நீர் மட்டம் உயர்வு மின் உற்பத்திக்கு பெரும் பயன் ஊட்டி : ஊட்டிக்கு குடிநீர் வினியோகிக்கும்

அணையில் நீர் மட்டம் உயர்வு மின் உற்பத்திக்கு பெரும் பயன் ஊட்டி : ஊட்டிக்கு குடிநீர் வினியோகிக்கும்

அணையில் நீர் மட்டம் உயர்வு மின் உற்பத்திக்கு பெரும் பயன் ஊட்டி : ஊட்டிக்கு குடிநீர் வினியோகிக்கும்

அணையில் நீர் மட்டம் உயர்வு மின் உற்பத்திக்கு பெரும் பயன் ஊட்டி : ஊட்டிக்கு குடிநீர் வினியோகிக்கும்

ADDED : ஜூலை 14, 2011 10:08 PM


Google News
ஊட்டி : ஊட்டிக்கு குடிநீர் வினியோகிக்கும் பார்சன்ஸ் வேலி நீர்தேக்க பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை கடந்த ஒரு மாத காலமாக பெய்து வருகிறது. மழை சீராக பெய்யாமல் விட்டு, விட்டு பெய்ந்து வந்த நிலையில், ஊட்டி நகர பகுதியை தவிர, சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை சற்று அதிகரித்துள்ளது. ஊட்டிக்கு குடிநீர் வினியோகிக்கும் பார்சன்ஸ் வேலி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அணை வேகமாக நிரம்பி வருகிறது. கடந்தாண்டு இந்த காலகட்டத்தில் அணையின் கொள்ளளவு 20 அடியாக இருந்த நிலையில், இந்தாண்டு நீர் இருப்பு 30 அடியாக உள்ளது.

ஆடி மாதத்தில் கன மழை பெய்யும் என்பதால் நீர்தேக்கத்துக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். இதே நிலை தொடர்ந்தால் பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கம் விரைவில் நிரம்பி விடும் வாய்ப்புள்ளது. தற்போது, இந்த அணையில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us