ADDED : செப் 04, 2011 11:01 PM
திருவாடானை:திருவாடானை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களை 100 நாள் வேலை
திட்டத்தின் கீழ் ஆழப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
கண்மாய்கரையின்
ஓரத்தில் மட்டும் இப் பணிகள் நடந்து வருகிறது. கண்மாய்க்குள் கொடிப்பூவரசு
செடிகள் அடர்ந்துள்ளன. இவை தண்ணீரை விரைவில் உறிஞ்சும் தன்மையும் விஷ
தன்மையும் கொண்டவை. பொதுமக்கள் குளிக்க பயப்படுகின்றனர். இச் செடிகளை
அப்புறப்படுத்த ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.