/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கிராம மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்: ஆர்.வடமலைகிராம மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்: ஆர்.வடமலை
கிராம மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்: ஆர்.வடமலை
கிராம மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்: ஆர்.வடமலை
கிராம மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்: ஆர்.வடமலை
ADDED : செப் 28, 2011 11:50 PM
சாயல்குடி : ''கிராம மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்'' என எஸ்.வாகைக்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.வடமலை கூறினார்.கடலாடி ஒன்றியம் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் கணேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்த பின் அவர் கூறியதாவது:எஸ்.வாகைக்குளம் ஊராட்சியில் இலந்தைக்குளம் ரோடு பல ஆண்டுகளாக இருசக்கர வாகனம் கூட செல்லமுடியாக அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ளது.
தரமான தார் ரோடாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்க முயற்சி செய்வேன். முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்வேன். மக்கள் தேவையறிந்து எந்த நேரத்திலும், எங்கும் சென்று உதவி செய்ய காத்திருக்கிறேன். பாகுபாடின்றி உதவி செய்வேன், என்றார். முருகன்
மற்றும் பலர் உடனிருந்தனர்.