அமைச்சர் உதவியுடன் புது திட்டங்கள்
அமைச்சர் உதவியுடன் புது திட்டங்கள்
அமைச்சர் உதவியுடன் புது திட்டங்கள்
ADDED : செப் 30, 2011 11:05 PM
வெம்பக்கோட்டை : ''அமைச்சர் உதயகுமார் உதவியுடன் புது திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்,'' என , மாவட்ட ஊராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் சுசீலா கூறினார்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் 17வது வார்டில் , அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் சுசீலா கூறியதாவது: தமிழக முதல்வரின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் ,தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் உதவியுடன் ,இப்பகுதி மக்களுக்கு உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.பசுமை கிராம திட்டத்தின் கீழ் ,வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீடு கட்டித் தர முயற்சி செய்வேன்.முதியோர் பென்சன் அனைத்து ஏழைகளுக்கும் கிடைக்க வும், குடிநீர் பிரச்னையை முற்றிலும் அகற்றி ,அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் கிடைக்கவும்,கிராம சாலைகளை மேம்படுத்தவும், ,அனைத்து கிராமங்களிலும் மகளிர் சுகாதார வளாகங்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கசிவு நீர் குட்டைகள் அமைக்கவும்,மானூர் குடிநீர் திட்டத்தை அனைத்து கிராமங்களுக்கு விரிவுபடுத்தவும்,விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் கிடைக்கவும்,இப்பகுதி பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க., அரசு பதவி ஏற்றவுடன் அமைச்சர் உதயகுமார் முயற்சியால், ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப் படுத்த முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளனர்.இதனால் இப்பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவர்.இதே போல் அரசின் பல நல்லத் திட்டங்களை அமைச்சர் உதவியுடன் இப்பகுதிக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும், என்றார். மாவட்ட இளைஞரணி அவைத் தலைவர் சுப்ரமணியன்,ஒன்றிய செயலாளர் மணிகண்டன்,முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் குருசாமி,ராஜேந்திரன்,ஜெ பேரவை துணைச் செயலாளர் ராஜீ,இளைஞரணி செயலாளர் காசித்துரைப்பாண்டியன்,முன்னாள் கவுன்சிலர் அருணாசலம்,கட்சி பிரமுகர்கள் சங்கர்ராஜ்,பாஸ்கரன்,கனகராஜ் கலந்து கொண்டனர்.