/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்கோவில்பட்டியில் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 14, 2011 12:03 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் ஏஐடியுசி ஓய்வூதியர் சங்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டியில் ஏஐடியுசி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி மெயின் ரோட்டிலுள்ள ஸ்டேட் பாங்க் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி ஓய்வூதியர்கள் சங்க தலைவர் சீத்தாராமன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன், துணை செயலாளர் பரமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஓய்வூதியம் பெறுவோருக்கு விலைவாசி புள்ளியுடன் இணைத்து உயர்த்தி வழங்கவும், ஓய்வூதிய தொகையை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு எதி ர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் அழகுமுத்துபாண்டியன், முன்னா ள் எம்எல்ஏ., அய்யலுசாமி ஆ கியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ., தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், கவுன்சிலர் சரோஜா, நகர துணை செயலாளர் சங்கரப்பன், குருசசாமி, பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.