/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சுதந்திர தின கலை நிகழ்ச்சி ஒத்திகை தீவிரம் வ.உ.சி., ஸ்டேடியத்தில் குவியும் மாணவியர்சுதந்திர தின கலை நிகழ்ச்சி ஒத்திகை தீவிரம் வ.உ.சி., ஸ்டேடியத்தில் குவியும் மாணவியர்
சுதந்திர தின கலை நிகழ்ச்சி ஒத்திகை தீவிரம் வ.உ.சி., ஸ்டேடியத்தில் குவியும் மாணவியர்
சுதந்திர தின கலை நிகழ்ச்சி ஒத்திகை தீவிரம் வ.உ.சி., ஸ்டேடியத்தில் குவியும் மாணவியர்
சுதந்திர தின கலை நிகழ்ச்சி ஒத்திகை தீவிரம் வ.உ.சி., ஸ்டேடியத்தில் குவியும் மாணவியர்
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., ஸ்டேடியத்தில், சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகளுக்கான பள்ளி மாணவியர் நடன ஒத்திகை நிகழ்ச்சி மும்முரமாக நடக்கிறது.
ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் வீரப்பன் சத்திரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 100க்கும் மேற்பட்டோர், தலைமை ஆசிரியர் அசோகன் உத்தரவின் பேரில், பள்ளி ஆசிரியைகளுடன் நேற்று வந்து, நடன ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஆசிரியைகள் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக, சுதந்திர தின கலை நிகழ்ச்சியில், எங்கள் பள்ளி பங்கேற்று வருகிறது. நடப்பாண்டு சுதந்திர தின விழாவிலும் பங்கேற்பதற்காக, மாணவியரை அழைத்து வந்து, நடன ஒத்திகையில், ஈடுபட்டு வருகிறோம். மாணவியர் ஆர்வமுடன் பயிற்சி பெறுகின்றனர். பல்வேறு பள்ளி, கல்லூரிகள் கலந்துகொள்வதால், ஆரோக்கியமான போட்டி காணப்படும். அதிலும், அரசு பள்ளி மாணவியரின் நடனம் அனைவரையும் கவர வேண்டும் என ஆர்வமுடன் பயிற்சி மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.