ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்
ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்
ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதல்

புனே: பறவை மோதியதால், புனேவில் இருந்து டில்லிக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787 - 8 ட்ரீம் லைனர் விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து விமானங்களை சோதனை செய்ய ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களினால், ஏர் இந்தியாவின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதனையடுத்து டில்லி செல்ல வேண்டிய பயணிகளுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளின் வசதிக்கு ஏற்ப டிக்கெட் ரத்து அல்லது வேறு நாளில் பயணம் ஏற்பாடு செய்து தரப்படும் எனத் தெரிவித்துள்ளது.