நைஜர் நாட்டில் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழப்பு; தீவிர தேடுதல் வேட்டை!
நைஜர் நாட்டில் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழப்பு; தீவிர தேடுதல் வேட்டை!
நைஜர் நாட்டில் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழப்பு; தீவிர தேடுதல் வேட்டை!
ADDED : ஜூன் 20, 2025 05:14 PM

புர்கினா: நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் ஆயுதக் குழுக்களுக்கும், ராணுவத்துக்கும் மோதல் நடந்து வரும் நிலையில், அங்கு பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
மாலி மற்றும் புர்கினா பஸோ ஆகிய நாடுகளுடனான எல்லையில் பனிபங்கோ என்ற நகரத்தில், 200க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் ராணுவ வீரர்கள் 34 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என நைஜரின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 12க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.