/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செட்டிக்குளம் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிசெட்டிக்குளம் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி
செட்டிக்குளம் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி
செட்டிக்குளம் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி
செட்டிக்குளம் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி
ADDED : ஆக 23, 2011 11:52 PM
மரக்காணம் : மரக்காணம் அடுத்த செட்டிக்குளம் கிராமத்தில் குடிநீர்
பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மரக்காணம் ஒன்றியம்
வைடப்பாக்கம் ஊராட்சி செட்டிக்குளம் கிராமத்தில் 100 குடும்பத்தினர்
உள்ளனர். இந்த பகுதியில் உள்ள 4 கைப்பம்புகளும் கடந்த நான்கு ஆண்டுகளாக
பழுதடைந்துள்ளது. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதடைந்ததால் தெருக்களில்
குழாய் மூலம் குடி நீர் வினியோகம் ஓராண்டாக தடைபட்டுள்ளது. தினமும் காலை,
மாலை இருவேளைகளிலும் 2 கி.மீ., தூரம் வரை நடந்து சென்று விவசாய கிணறுகளில்
பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஊராட்சி தலைவர் வைடப்பாக்கம்
கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் தங்கள் கிராமத்தை கண்டு கொள்வதில்லை என
செட்டிக்குளம் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இப் பிரச்னை குறித்து
மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை
எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து வரும் 28ம் தேதி ஒன்றிய அலுவலகம் முன்
முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.