/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் நில விற்பனை தடைச் சட்டம்புதுச்சேரியில் நில விற்பனை தடைச் சட்டம்
புதுச்சேரியில் நில விற்பனை தடைச் சட்டம்
புதுச்சேரியில் நில விற்பனை தடைச் சட்டம்
புதுச்சேரியில் நில விற்பனை தடைச் சட்டம்
ADDED : செப் 15, 2011 10:53 PM
புதுச்சேரி:புதுச்சேரியில் விவசாய நிலங்களை பாதுகாக்க நில விற்பனை தடை
சட்டம் கொண்டு வர வேண்டும் என தேசியவாத காங்., தலைவர் சுந்தரமூர்த்தி
வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி நகரை
ஒட்டியுள்ள வில்லியனூர், மங்கலம், திருபுவனை, நெட்டப்பாக்கம், பாகூர்,
குருவிநத்தம், ஏம்பலம், திருக்கனூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் விவசாய
நிலங்கள் விற்பனை படுஜோராக நடக்கிறது. புதுச்சேரி விவசாயிகளின்
மேம்பாட்டிற்காக அளிக்கப்படுகின்ற மான்யம் அவர்களுக்கு முறையாக போய்
சேருவதில்லை.குறிப்பாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை.
நெல், விதை, உரம், விவசாய உபகரணம், சொட்டு நீர்பாசன மானியங்கள், மழை,
நிவாரணங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லை.
புதுச்சேரியில் விவசாய நிலங்களை
பாதுகாக்க, நில விற்பனை தடைச் சட்டத்தை, முதல்வர் கொண்டு வர
வேண்டும்.தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகளுக்கு ஆயிரம்
ரூபாய் ஓய்வூதியம், அவர்களது பிள்ளைகள் உயர் கல்வி வரை படிக்க கல்வி உதவித்
தொகை, திருமண உதவித் தொகை, ஈமச்சடங்கு நிவாரணத் தொகை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் புதுச்சேரியிலும் விவசாயிகள்
மேம்பாட்டிற்காக உழவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.