/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பள்ளிகளுக்கு மின் விசிறிகள் வழங்கல்பள்ளிகளுக்கு மின் விசிறிகள் வழங்கல்
பள்ளிகளுக்கு மின் விசிறிகள் வழங்கல்
பள்ளிகளுக்கு மின் விசிறிகள் வழங்கல்
பள்ளிகளுக்கு மின் விசிறிகள் வழங்கல்
ADDED : ஆக 21, 2011 11:42 PM
மடத்துக்குளம் : மடத்துக்குளம் ஸ்டேட் பாங்க் சார்பில், மாணவர்களுக்கு இலவச
மின் விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி, சோழமாதேவியில் நடந்தது.
ஆசிரியர்கள்
தினத்தை முன்னிட்டு, கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில்,
அரசுப் பள்ளி மாணவர்களின் பயனுக்கு, மடத்துக்குளம் ஸ்டேட் பாங்க் சார்பில்,
இலவச மின் விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி, சோழமாதேவி ஊராட்சி ஒன்றிய
துவக்கப் பள்ளியில் நடந்தது. ஊராட்சி தலைவர் சாஜிதா பர்வீன் தலைமை
வகித்தார். மடத்துக்குளம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சுமதி முன்னிலை
வகித்தார். வங்கி மேலாளர் கலைச்செல்வன் மின்விசிறிகள் வழங்கினார். இதேபோல்,
கிருஷ்ணாபுரம் மற்றும் ஆர்.ஜி., புதூர் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன.


