Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.,யிடம் மனு

பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.,யிடம் மனு

பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.,யிடம் மனு

பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.,யிடம் மனு

ADDED : ஆக 23, 2011 11:47 PM


Google News
விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அடுத்த மாதம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி பாதுகாப்பு கோரி டி.ஜி.பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். உளுந்தூர்பேட்டை அடுத்த மாதம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தமிழக காவல்துறை டி.ஜி.பி., யிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

விவசாயியான எனக்கு 85 வயதாகிறது. மாதம்பட்டு கிராமத்தில் எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. பக்கத்து நிலத்துக்காரர்களான ஆபிரகாம், அருளாயி, ஜேம்ஸ், ஆரோக்கியதாஸ் மற்றும் விக்டர் ஒன்று சேர்ந்து, எனது நிலத்தை கொலை மிரட்டல் விடுத்து அபகரிக்க முயற்சிக்கின்றனர். இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு பொன்னுசாமி மனுவில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us