ADDED : செப் 03, 2011 12:30 AM
சிவகங்கை : ''மத்திய அரசுக்கு 2007-2011 ஐந்தாண்டு திட்டத்திற்காக 5 லட்சத்து 28 ஆயிரத்து 390 கோடி ரூபாய் எல்.ஐ.சி., கடனாக வழங்கியுள்ளது,'' என, சிவகங்கை கிளை மேலாளர் பாண்டியன் தெரிவித்தார்.எல்.ஐ.சி., அலுவலகத்தில், இன்சூரன்ஸ் வார துவக்க விழா நடந்தது.
ஆர்.டி.ஓ., துர்காமூர்த்தி முன்னிலை வகித்தார். உதவி நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.கிளை மேலாளர் பேசுகையில்: ''கடந்த ஆண்டு எல்.ஐ.சி., மூலம் 3 கோடியே 70 லட்சம் பாலிசி விற்பனையாகியுள்ளது. முதல் பிரிமியம் மூலம் 52 கோடியே 203 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது. தனியார் மய வளர்ச்சியை மீறி, எல்.ஐ.சி., நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனம் 7 லட்சத்து 49 ஆயிரத்து 150 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது,'' என்றார்.மூத்த ஏஜன்ட் பாண்டிலட்சுமி, எல்.ஐ.சி., ஊழியர் சங்க பொருளாளர் சிதம்பரம், வளர்ச்சி அலுவலர் ரங்கநாதபாபு, ஸ்ரீராஜ்குமார், ஊழியர் சங்க தலைவர் கர்ணன், மனமகிழ் மன்ற பொருளாளர் ரகுராமன் பங்கேற்றனர். ஊழியர் சங்க செயலாளர் தணிகைராஜ் நன்றி கூறினார்.