ADDED : செப் 20, 2011 10:23 PM
தேனி:போடி அரசு ஆஸ் பத்திரி வாசலில், பிறந்து மூன்று நாட்களே ஆன பெண்
குழந்தையை நேற்று அனாதையாக விட்டு சென்றனர். போலீசார் குழந்தையை மீட்டு
கலெக்டர் பழனி சாமியிடம் ஒப்படைத்தனர். அவர் குழந்தையை மாவட்ட சமூக நல
அலுவலர் ராஜராஜேஸ்வரியிடம் ஒப்படைத்தார்.
தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.
கருமாத்தூர் கிளேரிசியன் மெர்சி ஹோம் நிறுவனத்தில் குழந்தை
ஒப்படைக்கப்பட்டது.