/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலத்தில் குடிபோதையில் ரகளை சுற்றுலா பயணிகள் 4 பேர் கைதுகுற்றாலத்தில் குடிபோதையில் ரகளை சுற்றுலா பயணிகள் 4 பேர் கைது
குற்றாலத்தில் குடிபோதையில் ரகளை சுற்றுலா பயணிகள் 4 பேர் கைது
குற்றாலத்தில் குடிபோதையில் ரகளை சுற்றுலா பயணிகள் 4 பேர் கைது
குற்றாலத்தில் குடிபோதையில் ரகளை சுற்றுலா பயணிகள் 4 பேர் கைது
ADDED : செப் 03, 2011 02:43 AM
குற்றாலம்:குற்றாலத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகள் 4
பேரை போலீசார் கைது செய்தனர்.குற்றாலம் காசிமேஜர்புரத்தை சேர்ந்தவர்
திருமலைவேலு (48).
இவர் குற்றாலம் சன்னதி பஜாரில் பெட்டிக்கடை
வைத்துள்ளார். இவரது கடைக்கு சுற்றுலா பயணிகள் 4 பேர் சென்று செல்போனிற்கு
ரீசார்ஜ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு திருமலைவேலு இங்கு
ரீசார்ஜ் செய்ய இயலாது என கூறியுள்ளார். குடிபோதையில் இருந்த 4 பேரும்
ரீசார்ஜ் செய்யாமல் கடை எப்படி வைத்திருக்கலாம் என கூறி கடையில் இருந்த
பாட்டில்களை எடுத்து கீழே போட்டு உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.இதுபற்றி
குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பூமிநாதன்,
சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட
4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். இவர்கள் போடிநாயக்கனூர்
சந்திரன் மகன் மதன் (26), திருத்தங்கல் என்.என்.புரம் முத்தையா மகன் ஆனந்த்
(25), சிவன் மகன் கார்த்திக் (26), கொல்லம் ராஜன் மகன் ஸ்ரீகுமார் (35) என
தெரிய வந்தது.சம்பவம் பற்றி சப்-இன்ஸ்பெக்டர் சிவன்வழக்கு பதிவு செய்தார்.
இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.