பத்மஸ்ரீ விருது பெற்ற ஒடிசா பெண் விவசாயி கமலா பூஜாரி காலமானார்
பத்மஸ்ரீ விருது பெற்ற ஒடிசா பெண் விவசாயி கமலா பூஜாரி காலமானார்
பத்மஸ்ரீ விருது பெற்ற ஒடிசா பெண் விவசாயி கமலா பூஜாரி காலமானார்
ADDED : ஜூலை 20, 2024 07:45 PM

புபனேஸ்வர்: பல்வேறு நெல் வகைகளை சேகரித்து பத்மஸ்ரீ விருது பெற்ற ஒடிசா மாநில பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் விவசாயி கமலா பூஜாரி காலமானார்.
ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் பட்ராபுட் கிராமத்தை சேர்ந்தவர் கமலா பூஜாரி பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் விவசாயம் பார்த்து வந்தார். வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ் சுவாமிநாதனின் ஆராய்ச்சிமையம் வழிகாட்டுதல் பிரிவில் முக்கிய இடம் பிடித்திருந்தார். 1994-ம் ஆண்டு முதல் இவர் தனது தனிப்பட்ட முயற்சியால் நூற்றுக்கும் மேற்பட்ட நெல் ரகங்களை சேகரித்து வந்தார். இவரது முயற்சியை கண்டு கொண்ட மத்தியஅரசு அவரை கவுரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது வழங்கியது.
வயது மூப்பு காரணமாக உடல் நலகுறைவு ஏற்பட்டதை அடுத்து கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி காலமானார். பூஜாரியின் மறைவு குறித்து அவரது மகன் காங்காதரிடம் மாநில முதல்வர் மோகன்சரன் மாஜி இரங்கல் தெரிவித்தார்.