Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/க்ளைமாரைஸ் திட்ட விழிப்புணர்வு முகாம்

க்ளைமாரைஸ் திட்ட விழிப்புணர்வு முகாம்

க்ளைமாரைஸ் திட்ட விழிப்புணர்வு முகாம்

க்ளைமாரைஸ் திட்ட விழிப்புணர்வு முகாம்

ADDED : ஆக 11, 2011 02:54 AM


Google News
கும்பகோணம்: திருபுவனத்தில் க்ளைமாரைஸ் திட்டத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்று வரும் க்ளைமாரைஸ் திட்டத்தின்கீழ் திருவிடைமருதூர் தாலுக்கா திருபுவனம் கிராமத்தில் நெல் சாகுபடி முறைகள் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் புதிதாக வெளியிடப்பட்டுள்ள எ.டி.டீ.,49 நெல் ரகம் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ரவி, க்ளைமாரைஸ் திட்டத்தின் செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் வைத்திலிங்கம், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் வெளியிடப்பட்ட குறுவை, சம்பா தாளடி பருவத்திற்கு ஏற்ற ரகங்கள் குறித்து விளக்கமளித்தார். புதிதாக வெளியிடப்பட்டுள் ள சம்பா மற்றும் குறுவை பருவத்திற்கேற்ற ஏ.டி.டீ.,49 ரகத்தின் குணாதிசயங்களை விளக்கினார். உழவியல்துறை உதவிப்பேராசிரியர் ரமேஷ், திருந்திய நெல் சாகுபடி முறையில் நன்கு வாளிப்பான நாற்றுக்களை பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கினார். பயிற்சியில் 30க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். க்ளைமாரைஸ்திட்டத்தில்பங் குபெறும் 20 விவசாயிகளுக் கு 5 கிலோ வீதம் ஏ.டி.டீ.,49 புதிய ரக நெல் விதை வழங்கப்ப ட து. முன்னதாக முன்னோடி விவசாயி மகாலிஙகம் வரவேற்றார். இளநிலை ஆராய்ச்சியாளர் ராஜாமணி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us