/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல் பாதாள சாக்கடை திட்ட பணி: முடிவுக்கு வருவது எப்போது?திண்டுக்கல் பாதாள சாக்கடை திட்ட பணி: முடிவுக்கு வருவது எப்போது?
திண்டுக்கல் பாதாள சாக்கடை திட்ட பணி: முடிவுக்கு வருவது எப்போது?
திண்டுக்கல் பாதாள சாக்கடை திட்ட பணி: முடிவுக்கு வருவது எப்போது?
திண்டுக்கல் பாதாள சாக்கடை திட்ட பணி: முடிவுக்கு வருவது எப்போது?
ADDED : செப் 20, 2011 10:36 PM
திண்டுக்கல் நகரில் பாதாளசாக்கடைத்திட்டம் துவங்கியது முதல் நகர மக்கள் படாதபாடு பட்டுவிட்டனர். இந்த திட்டம் எப்பொழுது முடிவுக்கு வருமோ அன்று தான் வாகனஓட்டுனர்களும் நகர மக்களுக்கு நிம்மதி என்ற அளவிற்கு நிலைமை. பணிகள் இதுவரை முழுமையடைந்தபாடில்லை. திண்டுக்கல் நகராட்சி பகுதியில் 2008 பிப்ரவரியில் பாதாளசாக்கடைத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.நிதி ஒதுக்கீடுமொத்தம் 48 வார்டுகள் உள்ள நகராட்சியில் இத்திட்டம் முதல்கட்டமாக 20 வார்டுகளில் முழுமையாகவும், இரண்டு வார்டுகளில் பகுதியாகவும் செயல்படுத்தப்படவுள்ளது. மீதமுள்ள வார்டுகளில் பாதாளசாக்கடை திட்ட பணிகள் துவங்குவது குறித்து எந்த திட்டமும் இதுவரை இல்லை.இருபது வார்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த இரண்டு பகுதிகளாக பணிகளை துவங்கினர். முதல் பகுதிக்கு 10.9 கோடி ரூபாயும், இரண்டாம் பகுதிக்கு 17.93 கோடி ரூபாயும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தனியாக 12.4 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது.
சேதமடைந்த ரோடுகள்பாதாளசாக்கடை திட்ட பணிக்காக நகரில் மொத்தம் 56 கி.மீ., தூரம் தெருக்கள்,ரோடுகளில் குழி தோண்டினர்.இதனால் சென்ற ஆண்டு இறுதி வரை மக்கள் பட்டபாட்டிற்கு அளவில்லை. இத்திட்டத்தால் பயன் உண்டு என்றாலும், முறையற்ற, பாதுகாப்பற்ற பணியால் இந்த அளவிற்கு சிரமப்படவேண்டுமா என மக்களிடம் எதிர்ப்பு கிளம்ப துவங்கியது.இதையடுத்து சுதாரித்துக்கொண்ட நகராட்சி நிர்வாகம் அரசிடம் நிதி பெற்று சேதப்படுத்த 56 கி.மீ., தூர ரோடுகளில் 30 கி.மீ., ரோடுகளை சீரமைத்தது. இதற்கு தனியாக 8 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.மீதமுள்ள ரோடுகளான விவேகானந்தா நகர், குமரன்திருநகர், ஆர்.எம்., காலனி தெரு பகுதி, ஜான்பால் பள்ளி ரோடு உள்ளிட்ட 26 கி.மீ., ரோடுகள் இதுவரை சீரமைக்கப்படாமலேயே உள்ளது.பேகம்பூர்-வத்தலக்குண்டு இடை யே 3 கி.மீ., தூரத்தி ற்கு மெகா அளவு பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடந்ததால், போக்குவரத்திற்கு பயன்படுத்தமுடியாத நிலை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது.பணிகள் முடிந்தும் ரோடுகளை சீரமைக்க மெத்தனம் காட்டியதால் திண்டுக்கல்லிலிருந்து தேனி, குமுளி, கொடைக்கானல் செல்லும் பஸ்கள் தோமையார்புரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.பாதுகாப்பற்ற பணிதற்போது பணிகள் திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளி முன்பு நடந்து வருகிறது.
மூன்று ஆள் மட்டம் குழி தோண்டி குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.பள்ளி முன்பு பணி நடைபெற்றபோதும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி, இடத்தில் எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. மேலும் பணி நடைபெறும் இடத்தை சுற்றி பாதுகாப்பு வளையமும் அமைக்கப்படவில்லை.இரவில் இவ்வழியே செல்பவர்களுக்கு ஆபத்து தான்.முன்னதாக பாதாளசாக்கடைத்திட்ட பணி துவங்கிய சில மாதங்களிலேயே ஆர்.எம்.காலனி பகுதியில் நடுரோட்டில் தோண்டப்பட்ட குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து ஒருவர் பலியான சம்பவமும் நடந்தது. இருந்தும் எச்சரிக்கை இன்றி பணிகள் நடக்கிறது.மக்களிடம் ஆர்வமில்லை: திண்டுக்கல் நகராட்சியில் 2023 ஆண்டின் உத்தேச மக்கள்தொகையாக 30 லட்சம் பேர் என கணக்கிடப்பட்டு, இதற்கு தகுந்தாற்போல் பாதாளசாக்கடை பணிகள் நடந்துவருகின்றன.இத்திட்டத்தில் இணை ப்பு பெரும் வீடுகளுக்கு சதுர அடியை கணக்கிட்டு மாதாந்திர பராமரிப்பு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு வீட்டிற்கு மூன்றாயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை செலு த்த பெரும்பாலான மக்கள் முன்வரவில்லை. கட்டாயத்தின் பேரில் மட்டுமே இந்த கட்டணம் மக்களிடம் இருந்து பெறப்படுகிறது.இத்திட்டத்தில் நகராட்சியின் பங்களிப்பாக 11.97 கோடி செலுத்தவேண்டும். இந்ததொகையை மக்களிடம் வசூலிக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறிவருகிறது.திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு பாதாளசாக்கடைத்திட்டத்திற்கு பணம் செலுத்தி இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.முழுமையடையாத பணிகள்பாதாளசாக்கடை திட்டத்தின் முதல் பகுதிக்கான பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது. டிசம்பரில் முழுமையாக பணிகள் முடிந்து செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஆனால் இரண்டாம் பகுதி பணிகள் நடைபெறும் வார்டுகளில் அதிக பாறைகள் இருப்பதால் குழி தோண்டி குழாய் பதிப்பதில் சிரமம் இருப்பதால் பணிகள் தாமதமாக நடப்பதாக கூறுகின்றனர். இரண்டாம் பகுதி பணியில் இதுவரை 50 சதவீதமே முடிவடைந்துள்ளது.பாதி பணிகள் முடிக்கவே மூன்றாண்டு காலம் என்றால் மீதமுள்ள பணிகளை விரைவுபடுத்தினாலும் பயன்பாட்டிற்கு வர மேலும் குறைந்தது ஓராண்டாவது ஆகும் என தெரிகிறது. நகரில் தற்போது 20 வார்டுகளில் நடைபெறும் பணியை முடிக்கவே மூன்றாண்டுகளுக்கு மேல் கால அளவு என்றால் இந்த பணிகள் முடிந்த அடுத்த கட்டபணியாக மீதமுள்ள 20 க்கும் மேற்பட்ட வார்டுகளில் பணிகள் துவங்கி முடிப்பது எப்போது என அதிகாரிகளுக்கே தெரியவில்லை.திண்டுக்கல் நகராட்சியில் முழுமையாக அனைத்து பகுதியிலும் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுவது சில ஆண்டுகளில் இயலாத காரியமாகவே தெரிகிறது.
-நமது சிறப்பு நிருபர்-