டிரம்ப் உடன் நேருக்கு நேர் விவாதம்: சொதப்பியது குறித்து மவுனம் கலைத்த ஜோ பைடன்
டிரம்ப் உடன் நேருக்கு நேர் விவாதம்: சொதப்பியது குறித்து மவுனம் கலைத்த ஜோ பைடன்
டிரம்ப் உடன் நேருக்கு நேர் விவாதம்: சொதப்பியது குறித்து மவுனம் கலைத்த ஜோ பைடன்
ADDED : ஜூலை 03, 2024 10:45 AM

வாஷிங்டன்: சி.என்.என்., தொலைக்காட்சி ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சியில், ஜோ பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்றனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சொதப்பியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. விவாத மேடையில் கிட்டத்தட்ட நான் தூங்கிவிட்டேன் என ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிட உள்ளனர். இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி நடந்தது. இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திணறினார்.
நான் தூங்கிவிட்டேன்...!
விவாதத்தில், சொதப்பியது குறித்து ஜோ பைடன் கூறியதாவது: இது நான் கூறும் சாக்கு அல்ல. இது எனது விளக்கம். விவாதத்தில் நான் ஸ்மார்ட்டாக செயல்பட வில்லை. அதற்கு முதல் நாள் இரவு எனக்கு சரியான தூக்கம் இல்லை. நான் எனது ஊழியர்கள் சொன்னதை கேட்கவில்லை. விவாத மேடையில் கிட்டத்தட்ட நான் தூங்கிவிட்டேன். இவ்வாறு பைடன் கூறினார்.