/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பேட்டை அரசு ஐ.டி.ஐ. யில் அமைச்சர் "திடீர்' ஆய்வுபேட்டை அரசு ஐ.டி.ஐ. யில் அமைச்சர் "திடீர்' ஆய்வு
பேட்டை அரசு ஐ.டி.ஐ. யில் அமைச்சர் "திடீர்' ஆய்வு
பேட்டை அரசு ஐ.டி.ஐ. யில் அமைச்சர் "திடீர்' ஆய்வு
பேட்டை அரசு ஐ.டி.ஐ. யில் அமைச்சர் "திடீர்' ஆய்வு
ADDED : ஆக 06, 2011 01:56 AM
திருநெல்வேலி : பேட்டை அரசு ஐ.டி.ஐ.,யில் அமைச்சர் செல்லப்பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் நேற்று பேட்டை அரசு ஐ.டி.ஐ.,க்கு சென்றார்.
அங்கு மாணவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலக பதிவேடுகளை அவர் பார்வையிட்டார். தொழிற்பயிற்சிக்கூடத்தை சுற்றி பார்த்தார். மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.இணை இயக்குனர் ராஜசேகரன், உதவி இயக்குனர் நேசபாக்கியம், ஐ.டி.ஐ., முதல்வர் மூக்கையா உள்ளிட்டோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். மாணவர்களுக்கு சீரிய முறையில் பாடங்களை கற்பிக்கும்படி அவர் முதல்வர், ஆசிரியர்களை வலியுறுத்தினார்.பின்னர் அமைச்சர் கூறும்போது, ''மாணவ சமுதாயத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் அளித்துள்ளார். அரசு அறிவித்த அனைத்து நலத்திட்டங்களும் பேட்டை ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சிப்காட்டில் இருந்து இங்கு குடிநீர் அளிக்கப்படுவதாக கூறினர். ஐ.டி.ஐ.,க்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வசதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காம்பவுண்ட் சுவர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் அளிக்கப்படும்'' என்றார்.