/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஒருங்கிணைந்த துப்புரவு பணி மக்கள் ஒத்துழைப்புக்கு அழைப்புஒருங்கிணைந்த துப்புரவு பணி மக்கள் ஒத்துழைப்புக்கு அழைப்பு
ஒருங்கிணைந்த துப்புரவு பணி மக்கள் ஒத்துழைப்புக்கு அழைப்பு
ஒருங்கிணைந்த துப்புரவு பணி மக்கள் ஒத்துழைப்புக்கு அழைப்பு
ஒருங்கிணைந்த துப்புரவு பணி மக்கள் ஒத்துழைப்புக்கு அழைப்பு
ADDED : செப் 14, 2011 01:11 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பஞ்சாயத்தில் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.துப்புரவுப்பணியை துவக்கி வைத்து கலெக்டர் காமராஜ் பேசியதாவது:ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாதமாக மாநகராட்சி, நகராட்சிகள், யூனியன், டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஒருங்கிணைந்த துப்புரவுப்பணி நடக்கிறது.
இப்பணியில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, தங்கள் பகுதியை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஈரோடு மாவட்டத்தில் 246 மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வளாகத்தை மேம்படுத்த, 2.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.குப்பைகளை பொதுமக்கள் கண்ட இடங்களில் வீசிச் செல்லக்கூடாது. அதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும். மாவட்டத்தில் உள்ள 230 பஞ்சாயத்துக்களிலும் இப்பணி மேற்கொள்ளப்படும். இப்பணியில் பொதுமக்களுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுவினர் உட்பட பலரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.திட்ட இயக்குனர் வித்யாசாகர், மொடக்குறிச்சி யூனியன் ஆணையர் பத்மாவதி, கணபதிபாளையம் பஞ்சாயத்து தலைவர் வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.