/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/போதிய மழை இருந்தும் நீர் சேமிப்பு கேள்விக்குறிபோதிய மழை இருந்தும் நீர் சேமிப்பு கேள்விக்குறி
போதிய மழை இருந்தும் நீர் சேமிப்பு கேள்விக்குறி
போதிய மழை இருந்தும் நீர் சேமிப்பு கேள்விக்குறி
போதிய மழை இருந்தும் நீர் சேமிப்பு கேள்விக்குறி
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் போதிய பருவ மழை இருந்த போதும், பாசனத்துக்கு நீர் சேமிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் 60 சதவீதம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் குறித்து விவசாயிகள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதால், ஆக்கிரமிப்பாளர்கள் எந்த அச்சமும் இன்றி நீர் ஆதாரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
இந்தாண்டு இது வரையில் 190.69 மி.மீ., மழை பெய்த நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களில் 20 முதல் 30 சதவீதம் மட்டுமே மழை நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நீரும் கடந்த வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த மழையின் போது, அந்தந்த பகுதியில் பெய்த மழை நீர் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் அனைத்தும் நகரப்பகுதியில் உள்ள கழிவு நீர் கலக்கும் இடமாக மாறிப்போய் உள்ளது. இதனால், பாசனத்துக்கு தேவையான நீர் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்தாண்டு ஆடிப்பட்ட சாகுபடி கூட கடந்த வாரம் பெய்த மழைக்கு பின்னரே மானாவாரி நிலங்களில் சாகுபடி பணிகள் துவங்கியது. ஆண்டுதோறும் மாவட்டத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை பெய்த போதும், நீர் சேமிப்பு கேள்விக்குறியாகி விவசாயிகள் பாசன நீருக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நீர் ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிரடி நடவடிக்கையில் இறங்குவதோடு, பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், கடந்த காலங்களை போல் மாவட்டத்தில் விவசாய தொழில் சிறப்படையும்.