/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூடத்தில் கூரை போடும் நிலக்கடலை :அறுவடை துவங்கியதால் தீவிரம்கூடத்தில் கூரை போடும் நிலக்கடலை :அறுவடை துவங்கியதால் தீவிரம்
கூடத்தில் கூரை போடும் நிலக்கடலை :அறுவடை துவங்கியதால் தீவிரம்
கூடத்தில் கூரை போடும் நிலக்கடலை :அறுவடை துவங்கியதால் தீவிரம்
கூடத்தில் கூரை போடும் நிலக்கடலை :அறுவடை துவங்கியதால் தீவிரம்
ADDED : ஆக 11, 2011 11:01 PM
உடுமலை : கர்நாடகா மற்றும் பொள்ளாச்சி பகுதியில், நிலக்கடலை அறுவடை துவங்கியுள்ளதால், உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு வரத்து அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில், பருவமழைக்கு மானவாரியாக பயிரிடப்படும் நிலக்கடலை அறுவடை தீவிரமடைந்துள்ளது. நிலக்கடலைக்கு விலை கிடைக்கும் வரை, உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்திலுள்ள குடோன்களில், விளைப்பொருட்களை இருப்பு வைத்து, விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இப்பகுதிகளில், பருவமழை சாரலாக பெய்து வருவதால், உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில். இருப்பு வைக்க நிலக்கடலை வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, 300 மூட்டை நிலக்கடலை, உலர் களங்களில் காய வைக்கப்பட்டுள்ளது. கிலோ 18 ரூபாய் என்ற அளவில், விலை நிலவரம் நிலவி வருகிறது.மக்காச்சோளம் காலி: உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில், பி.ஏ.பி., பாசனத்துக்கு மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. அறுவடையின் போது விலை இல்லாததால், விவசாயிகள் மக்காச்சோளத்தை இருப்பு வைத்தனர். உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூட வளாகத்திலுள்ள குடோன்களில் மட்டும், 25 ஆயிரம் மூட்டை மக்காச்சோளம் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜன., மாதம் இருப்பு வைக்கப்பட்ட மக்காச்சோளத்துக்கு, கடந்த சில நாட்களாக நல்ல விலை கிடைத்து வருகிறது. 100 கிலோ மூட்டைக்கு, 1,300 ரூபாய் வரை விலை கிடைப்பதால், இருப்பை விவசாயிகள் விற்று வருகின்றனர்; தற்போது இருப்பு நிலவரம், 6,000 மூட்டையாக குறைந்துள்ளது. இம்மாத இறுதியில், வெளிமாநில வரத்து அதிகரித்து விலை சரியும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் இருப்பை விற்பனை செய்ய ஆர்வம் காட்டுவதாக, வேளாண் விற்பனை வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொத்தமல்லி கிடுகிடு: மசாலா பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி, உடுமலை பகுதியில் அதிகளவு கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சீசனில், 40 கிலோ கொண்ட கொத்தமல்லி மூட்டைக்கு, 2,700 ரூபாய் விலை கிடைத்து வந்தது. தற்போது, 3,300 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஒழுங்கு முறை விற்பனைக் கூட குடோன்களில், 500 மூட்டை கொத்தமல்லியை உடுமலை பகுதி விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.